நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அந்த வகையில் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சுற்றுவட்டார பகுதியில் இஸ்லாமியர்கள் இன்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையோடு இறைவனை வழிபட்டனர்.