நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அனந்த நாடார் பட்டியைச் சேர்ந்தவர் பரமசிவன். முதியவரான இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கவலையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று விஷம் குடித்த பரமசிவனை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து பாப்பாகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.