திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கோடாரங்குளம் விலக்கு பகுதியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான கல் மண்டபத்தை இடிக்க முற்படும் நெடுஞ்சாலை துறையின் அராஜகபோக்கை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்பினர் கலந்து கொண்டு நெடுஞ்சாலைத்துறையின் அராஜக போக்கை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.