நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் தன்ராஜ் என்ற கார்த்திக். இவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் கடந்த 1 மாதமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பட்டார்