பெரியார் குறித்து சீமான் தொடர்ந்து சர்ச்சையாக பேசி வரும் நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் காட்டம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ''பெரியாரை எதிர்ப்பவர்கள் முற்போக்கு சிந்தனைக்கு எதிரானவர்கள். சனாதன சக்திகள் தமிழகத்தில் காலூன்ற சிலர் அடித்தளம் அமைத்து கொடுக்கின்றனர். பெரியாரை விமர்சிப்பவர்கள் இடதுசாரி அரசியலுக்கு எதிரானவர்கள். அம்பேத்கரையும் விமர்சிக்கிறார்கள் என்று அர்த்தம்” என தெரிவித்துள்ளார்.