திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு நாளை (ஜூலை.07) நடைபெற உள்ளது. இப்பெரும் விழாவிற்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வர உள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் வறண்ட மேற்கு திசை காற்று வீசுவதாலும் கடல் காற்று நுழைவது தடைபடுவதாலும் நாளை திருச்செந்தூரில் 101°F வெப்பநிலை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே திருச்செந்தூர் வரும் பக்தர்கள் உடலில் நீரிழப்புகள் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.