எனக்கு முதல்வர் பதவியை தருவதாக கூறினார்கள் என பிரபல இந்தி நடிகர் சோனுசூட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர், "எனக்கு முதலில் முதல்வர் பதவியை தருவதாக சொன்னார்கள். நான் அதை மறுத்தபோது எனக்கு துணை முதல்வர், மாநிலங்களவை எம்பி பதவியை தருவதாக கூறினார்கள். ஆனால், நான் அதை மறுத்துவிட்டேன். நான் அரசியலில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.