'கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னைக்குள் வரவே சிரமப்படுகிறார்கள்'

65பார்த்தது
'கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னைக்குள் வரவே சிரமப்படுகிறார்கள்'
தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வருவோர், கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னைக்குள் வரவே சிரமப்படுகிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இன்றைய சட்டப்பேரவை கேள்வி, பதில் நேரத்தில், 'கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை அதிகம் இயக்க வேண்டும். அதிகாலையில் சென்னைக்கு வரும் பேருந்துகளை மட்டுமாவது நகருக்குள் அனுமதிக்க வேண்டும்' என போக்குவரத்துத் துறை அமைச்சரை கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவசங்கர், 'கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் அடிப்படை வசதிகள் படிப்படியாக செய்யப்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் 6 மாதத்திற்குள் அமைக்கப்படும். பேருந்தில் பயணிக்கும் யாரும் இது பற்றி பிரச்சனை செய்யவில்லை. அண்ணனை (செல்லூர் ராஜு) போன்றவர்களே பிரச்சனை செய்கிறார்கள்' என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி