காய்கறிகள் தொடங்கி மாவு, பால், பூக்கள் என அனைத்தையும் ஃப்ரிட்ஜில் இல்லத்தரசிகள் திணித்து விடுவர். ஆனால் ஃப்ரிட்ஜில் பொருட்களை வைக்க சில முறைகள் உள்ளன. பூண்டு, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை தோலை உரித்து விட்டு ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. துருவிய மற்றும் உடைந்த தேங்காய்களையும் ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. இறைச்சிகளை ஃப்ரீசர் பகுதியில் தான் வைக்க வேண்டும். ஃப்ரீசரில் வைத்த 3 மணி நேரங்களுக்குள் அவற்றை எடுத்து சமைத்து விட வேண்டும்.