எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சி மீது எப்போதும் குறிப்பிட்ட சதவீதம் அதிருப்தி இருக்க தான் செய்யும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இன்று (டிச. 23) செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்ற கருத்தை அலட்சியப்படுத்த முடியாது, கிராமங்கள் வரையில் அதன் தாக்கமும், பாதிப்பும் இருப்பதால் முதல்வர் ஸ்டாலின் இதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.