தக் லைஃப் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், “தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம்” என்றார். இந்த கருத்துக்கு கர்நாடக மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கமல்ஹாசன் கன்னட மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என கூறி வருகின்றனர். இந்நிலையில், கமல் பேச்சுக்கு அமைச்சர் கே.என்.நேரு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “கன்னட மொழி குறித்து கமல் பேசியதில் எந்த தவறும் இல்லை தமிழ் மொழியில் இருந்துதான் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகள் வந்தன” என்றார்.