மக்களவையில் இன்று (ஜூலை 29) எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பி-யுமான ராகுல் காந்தி பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசினார். அப்போது, “10 ஆண்டுகளில் 70 முறை போட்டித் தேர்வு வினாத்தாள்கள் கசிந்துள்ளன. அது பற்றி பட்ஜெட்டில் ஒரு வார்த்தை கூட இல்லை. கடந்த 20 ஆண்டுகளில் கல்விக்கு குறைவான அளவில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்” என தெரிவித்துள்ளார். மேலும், “பாஜக ஆட்சியில் ஒன்றிய அமைச்சர்களே அச்சத்தில் தான் உள்ளனர்” என்றார்.