சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டார். அப்போது அவர் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சொத்துகள் விவரங்களை மறைத்ததாக அவர் மீது சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், “எடப்பாடி பழனிசாமியை விசாரணை செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிடப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தலாம். இந்த விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.