ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம், ‘பாஜகவுடன் கூட்டணி இல்லை’ என தவெக தலைவர் விஜய் கூறியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “விக்கிரவாண்டியில் விஜய் நடத்திய மாநாட்டில் இருந்தே, தவெக தலைமையில் தான் கூட்டணி என அவர் கூறிவருகிறார். இடையில் இருப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் தான் தவெக கூட்டணி குறித்து பேசப்படுகிறது. தவெக தரப்பில் இருந்து எதுவும் கூறியதில்லை” என்றார்.