மதுரையில் தைப்பூசத் தெப்பத் திருவிழா ஜன., 30ஆம் தேதி தொடங்கி பிப்., 11 வரையில் நடக்கிறது. இதையொட்டி, மீனாட்சி - சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன், கோயிலை சுற்றிலும் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். விழாவின் முக்கிய நிகழ்வாக பிப்., 5, 6ஆம் தேதிகளில் திருஞானசம்பந்தர் சுவாமிகள் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும், 11ஆம் தேதி தெப்ப உற்சவமும் விமர்சையாக நடைபெறவுள்ளது. அலங்கரித்த தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.