எலியை கொல்ல அடிக்கப்பட்ட மருந்தால் 2 குழந்தைகள் உயிரிழப்பு
சென்னை குன்றத்தூரில் உள்ள ஒரு வீட்டில் எலித் தொல்லையை கட்டுப்படுத்த நேற்று (நவ. 13) மருந்து அடித்தனர். இது காற்றில் பரவியதால் ஏ.சி. அறையில் தூங்கிய கிரிதரன் (34), மனைவி பவித்ரா (31), மகள் வைஷ்ணவி (6), மகன் சாய் சுதர்சன் (1) ஆகிய நால்வருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2 சிறார்கள் உயிரிழந்தனர். அவர்களின் பெற்றோர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர்.