பெரியகுளம்
தேனி நீதிமன்ற அலுவலகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரையில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தேனி மாவட்ட நீதிமன்ற நுழைவாயில் முன்பாக இன்று (செப். 13) தேனி வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் தலைவர் ஏ. சி. சந்தானகிருஷ்ணன் தலைமையில் செயலாளர் செல்வகுமார், இணைச் செயலாளர் கே.எஸ். லோகநாதன் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வழக்கறிஞர்களை தாக்கிய கயவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.