தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சக்கம்பட்டி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் வள்ளி (45 வயது). கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் ராஜபாண்டி (24 வயது). வேலை எதுவும் செய்யாமல் திருநங்கைகளுடன் பழகி வந்துள்ளார். இதனை தாயார் வள்ளி கண்டித்துள்ளார்.
இதனால், கோபமடைந்த ராஜபாண்டி, சம்பவ தினத்தன்று யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் ராஜபாண்டி கிடைக்கவில்லை. இதனால், ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் வள்ளி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ராஜபாண்டியை தேடி வருகின்றனர்.