தேனி அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

65பார்த்தது
தேனி அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம், எல்லைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (34 வயது). இவர் தேனி க. விலக்கு அருகே சிலோன் காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அடிக்கடி குடிப்பழக்கம் உடைய நபராக பழனிச்சாமி இருந்துள்ளார். இதனால் குடும்பத்தில் மனைவியுடன் குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவ தினத்தன்று குடும்பத் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த பழனிச்சாமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து க. விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி