தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி அருகே டி. வாடிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ் (48 வயது). கால்களில் வெரிகோஸ் வெயின் நோயினால் பாதிக்கப்ப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், மனமுடைந்த அவர் விஷ மருந்து குடித்தார். தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பாக்கியராஜ் உயிர் இழந்தார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.