தேனி69வது வனவிலங்கு வார விழாவை முன்னிட்டு ஆண்டிபட்டி வனச்சரகம் சார்பாக வனவிலங்கு பாதுகாப்பிற்கான கூற்று என்ற கருப்பொருளை மையப்படுத்தி பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஆண்டிபட்டி வட்டாரத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சுமார் 300 நபர்கள் ஓவிய போட்டி, பேச்சு போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகளில் கலந்து கொண்டனர். மேற்கண்ட போட்டிகளானாது மூன்று வகுப்பு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. 6 முதல் 8 வகுப்பு வரை9 முதல் 10 வகுப்பு வரை 11 முதல் 12 வகுப்பு வரை போட்டிகள் நடத்தப்பட்டது.
மேற்கண்ட நிகழ்ச்சியானது ஆண்டிபட்டி - ஏத்தக்கோவில் சாலையில் உள்ள எஸ். கே. ஏ. மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியின் இறுதியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கோப்பையை வழங்க இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருமதி. ஷர்மிலி, உதவி வனப்பாதுகாவலர், தேனி வனக்கோடம் பரிசுகளை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியை தலைமை ஏற்று நடத்தியவர் த. அருள்குமார், வனச்சரக அலுவலர், ஆண்டிபட்டி வனச்சரகம். இந்த நிகழ்ச்சியில் வனப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.