: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ரங்கசமுத்திரம் பகுதி சேர்ந்தவர் ராஜ் திலக், 33 வயது. ஓட்டல் தொழிலாளி. இவர் சம்பவ தினத்தன்று தனது டூவீலரை ஆண்டிபட்டி வைகை அணை ரோட்டில் சிட்கோ அருகே நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த பொழுது அதிர்ச்சி காத்திருந்தது. டூவீலரை காணவில்லை. இது குறித்து ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் ராஜ் திலக் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த ஆண்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.