வீரபாண்டி திருவிழா ரூ. 3. 06 கோடிக்கு ராட்டினம் ஏலம்

82பார்த்தது
தேனி அருகே வீரபாண்டி திருவிழாவை முன்னிட்டு ரூ. 3. 06 கோடிக்கு ராட்டினம் ஏலம்

தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா அடுத்த மாதம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்நிலையில் திருவிழாவில் ராட்டினம் அமைப்பதற்கான ஏலம் செயல் அலுவலர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் ரூ. 3 கோடியே 6 லட்சத்திற்கு ராட்டினம் ஒப்பந்தத்திற்கான ஏலத்தை தேனியைச் சேர்ந்த விஜயராஜன் என்பவர் எடுத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி