பெரியகுளம் தென்கரைப் பகுதியில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மூன்றாவது வார சனிக்கிழமை தினத்தினை முன்னிட்டு இன்று(அக். 05) உற்சவராக எழுந்தருளிய வரதராஜ பெருமாள் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்வில் பெரிய உடன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமானை வழிபட்டு சென்றனர்.