தேனி மாவட்டம், உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு சார்பாய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ தினத்தன்று ஆனைமலை யான்பட்டி வாய்க்கால் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது, மல்லிங்காபுரம் மந்தை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருண்குமார் (40 வயது) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 28 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். மேலும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.