தேனி சூப்பர் மார்க்கெட்டில் திருடிய இரண்டு பெண்கள் கைது

79பார்த்தது
தேனி சூப்பர் மார்க்கெட்டில் திருடிய இரண்டு பெண்கள் கைது
தேனி ரத்தினம் நகர் பகுதியில் பெரியகுளம் சாலையில் தனியார் பல்பொருள் அங்காடி அமைந்துள்ளது. இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் இரவு இரண்டு பெண்கள் வந்துள்ளனர். 

அப்போது அவர்கள் இருவரும் பல்பொருள் அங்காடியில் உள்ள பல்வேறு பொருட்களை திருடிக் கொண்டு தப்பி ஓட முயன்றனர். இதைப் பார்த்த கடை ஊழியர்கள் இந்த இரண்டு பெண்களையும் கையும் களவுமாக பிடித்து அல்லிநகரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் பிடிபட்ட பெண்கள் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (50வயது), திருப்பத்தூரைச் சேர்ந்த செல்வி (52 வயது) என்பதும் ரூபாய் பத்தாயிரம் மதிப்பிலான பொருட்களை அவர்கள் திருடியதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணவேணி, செல்வி ஆகிய இருவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி