தேனி அருகே லட்சுமிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 24). சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவ தினத்தன்று தனது வீட்டிற்கு முன்பு டூ வீலரை நிறுத்தி இருந்தார். திரும்ப வந்து பார்த்தபோது டூ வீலர் மாயமாகி இருந்தது. இது குறித்து, ராஜா வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.