ஆண்டிப்பட்டி அருகே டூவீலர்கள் மோதி விபத்து

81பார்த்தது
ஆண்டிப்பட்டி அருகே டூவீலர்கள் மோதி விபத்து
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன் வயது 52 கூலி தொழிலாளி இவர் சம்பவ தினத்தன்று தனது டூவீலரில் கதர் நரசிங்கபுரத்தில் இருந்து பாலக்கோம்பை ரோட்டில் தெப்பம்பட்டி நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது, ஜேஜே காலனி அருகே வந்தபோது தெப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயவஸ்வா என்பவர் ஓட்டி வந்த டூ வீலர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் முருகன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது குறித்து ராஜீவ் காந்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி