கும்பக்கரை அருகே உள்ள கும்பக்கரை அருவியில் ஐயப்ப பக்தர்கள் ஆனந்த குளியல்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளது. தொடர் மழையால் சில நாட்கள் முன்னர் தடை விதிக்கப்பட்டது. தற்போது நீர்வரத்து குறைந்து சீராக உள்ள நிலையில் நேற்று முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதனிடையே இன்று சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலை முதல் ஆர்ப்பரித்துக் கொட்டி வரும் கும்பக்கரை அருவி நீரில்குளித்து மகிழ்ச்சி அடைந்து செல்கின்றனர்