தேனி, பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. தற்போது அருவியில் நீர்வரத்து சீராக உள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்கின்றனர். மேலும் தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவியில் ஆனந்தமாய் குளித்து செல்கின்றனர்.