தேனி மாவட்டம் முத்து தேவன் பட்டி தெற்கு காலனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (38 வயது). இவர் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், சம்பவ தினத்தன்று பணி முடிந்து, டூ வீலரில் தேனிக்கு பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். சருத்துபட்டி முனீஸ்வரன் கோயில் அருகே நிலை தடுமாறி பாலத்தில் மோதி விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மணிகண்டன் உயிரிழந்தார். இது குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.