தேனி மாவட்டம், தேவதானப்பட்டி புறவழிச்சாலை அருகே பொம்மிநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் புதிதாக தார்சாலை அமைப்பதற்கு நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஒப்பந்தம் விடப்பட்டது. இந்த நிலையில், ரூ. 36 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 1 கிலோமீட்டர் 200 மீட்டர் தூரத்திற்கு தார்சாலை அமைக்கும் பணி அரசு ஒப்பந்ததாரர் மூலம் நடைபெற்றது. இந்த தார்சாலை பணியினை பெரியகுளம் உபகோட்ட பொறியாளர் கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் சரவணன், மற்றும் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் அருகில் இருந்தனர்.