தேனி : வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்சம் திருட்டு.. பெண் கைது

68பார்த்தது
தேனி : வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்சம் திருட்டு.. பெண் கைது
தேனி பொம்மை கவுண்டன்பட்டி கட்டளகிரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் ( 60 வயது). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அப்போது அவரை, அவருடைய தங்கையான போடி பாஸ் பஜார் பகுதியை சேர்ந்த செல்வி (50 வயது) என்பவர் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில், முருகனின் வீட்டில் வைத்திருந்த அவரது வங்கி ஏடிஎம் கார்டு மயமாக்கி இருந்தது. அதனை தேடி வந்த நிலையில், அந்த ஏடிஎம் கார்டை எடுத்து வங்கிக்கணக்கில் இருந்து ரூபாய் 5 லட்சத்து4 ஆயிரத்தை செல்வி எடுத்தது தெரிய வந்தது. இது குறித்து முருகன் அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இந்த புகாரின் பேரில் அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வியை கைது செய்தனர் மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி