தேனி புதிய பேருந்து நிலையத்திற்கு அன்றாடம் 5000க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்லக்கூடிய நிலையில் பேருந்து நிலையத்தின் 2வது பிளாட்பாரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலைய மேற்கூரைகள் முற்றிலும் சேதம் அடைந்த நிலையில் காணப்படுகின்றது.
இதனால் வெளியூர் செல்வதற்காக பேருந்துக்கு காத்திருக்கக்கூடிய பயணிகள் மழை மற்றும் வெயில் நேரங்களில் சிரமம் அடைந்து வருகின்றனர். உடனடியாக மேற்கூரையை சீரமைக்க பேருந்து பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.