வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தேனி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக இன்று (டிசம்பர் 14) தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். மேலும் இன்றைய தினம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.