தேனி மாவட்ட ஆட்சியரிடம், தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி தலைமையில் இன்று (20-3-2025) மனு வழங்கப்பட்டது. மனுவில், "தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, பொதுநலப் பிரிவு, மகப்பேறு மருத்துவமனை பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு என பல்வேறு பிரிவுகள் உள்ளன.
கடந்த ஒரு மாதமாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தினர் வழங்க வேண்டிய 6 லட்சம் லிட்டர் தண்ணீருக்கு பதிலாக, தற்போது 3 லட்சம் லிட்டருக்கும் குறைவான அளவு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வெயில்காலம் என்பதால் மருத்துவமனை வளாகத்தில் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மனு அளிக்கும் நிகழ்வில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல், தேனி நகரத் தலைவர் சிவராம், தேனி நகர அமைப்பாளர் கனகு பாண்டி, நகரச் செயலாளர் அழகுபாண்டி, நகரப் பொருளாளர் நாகராஜ், நகர துணைச் செயலாளர்கள் ப்ரம்மச்சாரி இராமகிருஷ்ணன், ஏழுமலையான், சுரேஸ், நகர செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.