தேனி அல்லிநகரம் பள்ளி ஓலை தெவை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 60). இவர் நேற்று, தேனி பெரியகுளம் சாலையில் பொம்மைகவுண்டன்பட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். சண்முகப்பிரியன் என்பவர் ஓட்டி வந்த டூவீலர் வேலுச்சாமி மீது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், படுகாயமடைந்த வேலுச்சாமி, ஆண்டிச்சாமி, சண்முகப்பிரியன், ஆகிய மூன்று பேரை தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேலுச்சாமி உயிர் இழந்தார். அல்லிநகரம் போலீசார் விசாரணை.