தேனி: திமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு விழா

69பார்த்தது
தேனி: திமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு விழா
தேனி மாவட்டம், சின்னமனூர் நகர திமுக சார்பில் புனித ரமலான் இப்தார் நோன்பு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தேனி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் கம்பம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான கம்பம். நா. இராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். 

சின்னமனூர் நகர திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக புனித ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது, சின்னமனூர் நகர்மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு, சின்னமனூர் திமுக நகர செயலாளர், சின்னமனூர் நகர மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், பொது மக்கள், நோன்பாளிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி