நாட்டுக்காக தங்களது இளம் வயதை ராணுவ பணிகளில் கழித்து ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரர்கள் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும் வாழ்வாதார மேம்படுத்திடவும் வங்கி கடன் பெறலாம். முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க ஒரு கோடி வரை வங்கி கடன் பெறுவதற்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.