தேனி: மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

77பார்த்தது
தேனி: மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் மொக்கா பாண்டி (30 வயது). அவரது மனைவி லீலாவதி. இந்த தம்பதியினருக்கு இளமாறன் என்கிற மூன்று வயது மகன் உள்ளார். நேற்று (மார்ச் 17) வீட்டில் மின் மோட்டார் இயக்கி குடிநீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போழுது எதிர்பாராத விதமாக மின்வயரை இளமாறன் மிதித்துள்ளார். மின்வயரில் மின்கசிவு ஏற்பட்டதால் மின்சாரம் தாக்கி இளமாறன் மயங்கி விழுந்தார். 

அவரை மீட்டு தேவதானப்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேவதானப்பட்டி அருகே மின்வயரில் ஏற்பட்ட மின்கசிவினால், மின்சாரம் தாக்கி மூன்று வயது சிறுவன் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி