தேனி: புத்தகத் திருவிழா விழிப்புணர்வு பேரணி

69பார்த்தது
தேனி: புத்தகத் திருவிழா விழிப்புணர்வு பேரணி
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பகுதியில், வரும் மார்ச் 23ஆம் தேதி முதல் மார்ச் 30ஆம் தேதி வரை மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி இன்று (மார்ச் 20) நடைபெற்றது. 

பெரியகுளம் தென்கரை நூற்றாண்டுகிளை நூலகம் அருகே விழிப்புணர்வு பேரணி துவக்கப்பட்டு, பெரியகுளம் முக்கிய நகர் பகுதிகள் வழியாக சென்று பேரணி நிறைவடைந்தது. பெரியகுளம் நகர மன்ற தலைவர் சுமிதா சிவகுமார், தென்கரை கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் அன்புக்கரசன், வடகரை நூலக வாசகர் வட்ட தலைவர் மணிகார்த்திக், அரிமா சங்க நிர்வாகி லயன் ராமநாதன், சமூக ஆர்வலர்கள், நல்நூலகர்கள் சவடமுத்து, குமரன், மற்றும் பள்ளி மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி