மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட காவல்துறையினர்

83பார்த்தது
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட காவல்துறையினர்
மனநலம் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு பாதுகாப்பு நலன் கருதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த காவல்துறையினர். தேனி மாவட்டம் ஜெயமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அழகர்நாயக்கன்பட்டி கிராமத்தில் தனது தந்தை இல்லாத நிலையில் திருமணம் ஆகாமல் சுமார் 48 வயது மதிக்கத்தக்க பெண் மனநலம் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்தார். ஜெயமங்கலம் காவல் நிலைய பயிற்சி சார்பு ஆய்வாளர் திருமதி. அன்னலட்சுமி அவர்கள் உதவியுடன் ம. சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார் அவர்கள் பெண்ணின் எதிர்கால நலன் கருதி பாதுகாப்புடன் பெரியகுளம் அரசு மனநல பெண்கள் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டது. இந்த நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் பாராட்டினை பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி