தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள பிரசித்தி பெற்றஅருள்மிகு கைலாசநாதர் மலைக்கோயிலில் சனிக்கிழமை மகாசனி பிரதோஷம் வழிபாடு நடைபெற்றது. நந்திகேஷ்வரருக்கும் கைலாசநாதருக்கும் அபிஷேகம் செய்து அலங்காரம் செய்த பின்னர் தீபாராதனைகள் நடைபெற்றது உலக நலம் வேண்டி கூட்டு வழிபாடு நடைபெற்றது அதிக பக்தர்கள் தரிசனம் செய்தார்கள் வரும் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேருகிறது என்று பக்தர்கள் கூறி வருகிறார்கள். வருகை தந்த பக்தர்களுக்கு, ஓ. ராஜா முன்னால் ஆவின் மண்டல தலைவர், ரவிச்சந்திரன் பெட்ரோல் பல்ங், ராமமூர்த்தி இவர்கள் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி. ப. ஜெயபிரதீப் செயலாளர் க. சிவகுமார் பொருளாளர் விஜயராணி மற்றும் குழு உறுப்பினர்கள் செய்துள்ளார்கள்.