ராஜீவ் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு மௌன ஊர்வலம்

55பார்த்தது
ராஜீவ் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு மௌன ஊர்வலம்
மறைந்த முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் தலைவருமான ராஜீவ்காந்தியின் 80வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இன்று மௌன ஊர்வலம் நடந்தது. இதில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி சையதுஹசீனா சிறப்பு அழைப்பாளராக ஊர்வலத்தில் பங்கேற்றார். போடிநாயக்கனூரில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே தொடங்கி காமராஜர் பஜார், தேவர் சிலை, பேருந்து நிலையம் வழியாக வந்து வ. உ. சி. சிலை அருகே நிறைவடைந்தது. தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் தேனி மாவட்டத் தலைவர் முருகேசன் மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவி கிருஷ்ணவேணி மாவட்ட துணை தலைவர் சன்னாசி நகரத் தலைவர் முசாக் மந்திரி, வட்டாரத் தலைவர் ஜம்பு சுதாகர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மகிளா காங்கிரஸார் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி