தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் இருந்து பொம்மிநாயக்கன்பட்டி, வழியாக சிந்துவம்பட்டி, நடுப்பட்டி, ரெங்கநாதபுரம், A. வாடிப்பட்டி மற்றும் பல கிராமங்களுக்குச் செல்லும் சாலையை பெரியகுளம் நெடுஞ்சாலைத் துறையினர் இருபுறமும் JCB இயந்திரம் மூலம் சுத்தம் செய்து வருகின்றனர். கிராமப்புறங்களில் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த சாலையில், சில நேரங்களில் செடிகள் மற்றும் புற்கள் வளர்ந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்தன.
நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக JCB இயந்திரம் மூலம் சுத்தம் செய்து வருவதால், வாகனங்கள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் செல்ல முடிகிறது. நெடுஞ்சாலைத் துறையினர் வலது மற்றும் இடது புறங்களை JCB இயந்திரம் மூலம் சுத்தம் செய்வதால், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சீராக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், அரசு ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரியகுளம் நெடுஞ்சாலைத் துறைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, நெடுஞ்சாலைத் துறை பெரியகுளம் உபகோட்ட உதவி பொறியாளர் சரவணன் அறிவுறுத்தலின்படி சாலை பணியாளர்கள் திறம்பட பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.