தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டமனூர் பகுதியில் நீர்வழித் தடங்களை தனியார் நிறுவனம் சார்பில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைத்து ஆக்கிரமிப்பை தடை செய்யக்கோரியும், விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யக்கோரியும், தேவேந்திரகுலவேளாளர் சமூகத்தை பட்டியல் சாதியில் சேர்க்கக் கோரியும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தார் பட்டத்தில் மாவட்ட நகர கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.