தேனி மாவட்டம் பெரியகுளம் விளையாட்டு மைதானத்தில் நேரு யுவகேந்திரா சார்பில் வாலிபால் விளையாட்டு போட்டிகள் 2 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற பெரியகுளம் அணியினருக்கு மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் இராஜபாண்டியன் பரிசு கோப்பை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதில் நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் கோகுல்கிருஷ்ணன், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்