தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தைத்திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் சஜீவனா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் ஆகியோர் அரசு அலுவலர்களுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடினர். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் பம்பரம் சுற்றி சக அரசு அலுவலர்களுடன் உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.