தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி பேரூராட்சி 9வது வார்டு பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் கிளை துணைத் தலைவர் சாதிக் அவர்களுடைய வீடு மற்றும் அதன் அருகில் உள்ள அவரது கோழிக்கடையில் இரவு சமூக விரோதிகளால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதுதொடர்பாக தேவதானப்பட்டி ஆய்வாளர் அப்துல்லா தலைமையிலான போலீசார் நேரில் ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.