தேனி மாவட்டத்தில் உள்ள மெய்வழி மக்கள் இயக்க தலைவர் செல்வ லட்சுமி தலைமையிலான நிர்வாகிகள் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங்கை நேற்று நேரில் சந்தித்து, தேனி மாவட்டத்தில் செயல்படும் கிரஷர்கள், குவாரிகள் அரசு விதிமுறைகளின்படி செயல்படுகின்றனவா என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர். உடன் நகர செயலாளர் அருள் பாண்டி, மாவட்ட மகளிர் அணி தலைவர் ஜெயலீலா, துணைத் தலைவி அமுதா, செயலாளர் விஜயா, காவியா மற்றும் ரவி ஆகிய நிர்வாகிகள் இருந்தனர்.